கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் சாந்தகுமாரி (70) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி தன்னுடைய மகள் சசிலேகா மற்றும் பேரன் சஞ்சயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தகுமாரிக்கு சாஸ்திரம், சம்பிரதாயம் மீது அதிக நம்பிக்கை இருந்துள்ளது. இதனால் மகள் மற்றும் பேரனையும் தன்னை போன்று சாஸ்த்திர சம்பிரதாயங்களை கடைபிடிக்குமாறு மூதாட்டி அடிக்கடி வலியுறுத்தி தகராறு செய்துள்ளார். அதோடு சாப்பாட்டு விஷயத்திலும் கூட தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சஞ்சய் கோபி மஞ்சூரியன் வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது சாந்தகுமாரி பேரனை திட்டி தீர்த்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சஞ்சய் தன்னுடைய பாட்டியை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை தன்னுடைய தாயிடம் சஞ்சய் கூறவே வெளியே சொன்னால் பிரச்சனை வந்துவிடும் என்பதற்காக, சசிலேகா, சஞ்சய் மற்றும் அவருடைய நண்பர் நந்தேஷ் ஆகியோர் மூதாட்டியின் உடலை கரி மற்றும் சிமெண்டை வைத்து வீட்டில் உள்ள ஒரு அலமாறியில் புதைத்துள்ளனர். அதன்பிறகு சஞ்சய் மற்றும் சசிலேகா தலைமறை வாகிவிட்டனர். இந்நிலையில் சுமார் 6 வருடங்களுக்கு பிறகு மகாராஷ்டிரா மாநிலத்தில் சசிலேகா மற்றும் சஞ்சய் ஆகியோர் இருந்தது தெரியவந்ததால் காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்த சஞ்சய் பாட்டியை கொலை செய்ததால் பாதியிலேயே படிப்பை நிறுத்தியதோடு, மகாராஷ்டிராவில் ஹோட்டல் ஊழியராகவும் சசிலேகா ஒரு பணி பெண்ணாகவும் வேலை பார்த்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.