அம்முவிற்காக காத்திருப்பதாக நடிகை ஐஸ்வர்ய லட்சுமி கூறியுள்ளார்.
அண்மையில் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி பூங்குழலியாக நடித்திருந்தார். இவர் தற்போது தெலுங்கு திரைப்படமான அம்மு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நவீன் சந்திரா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றார்கள். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகின்ற 24ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்த படமானது போலீஸ் கணவனின் கொடுமையில் இருந்து தப்பிக்க கைதி ஒருவருடன் இணைவதும் பின்பு அந்த சிக்கலில் இருந்து விடுபடுவதுமான ஒரு பெண்ணின் கதையாகும். இதில் அந்தப் பெண்ணாக ஐஸ்வர்ய லட்சுமி, கணவனாக நவீன் சந்திராவும், கைதியாக பாபி சிம்ஹாவும் நடித்திருக்கின்றார்கள்.
இப்படம் குறித்து ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளதாவது, தவறான உறவில் சிக்கிய ஒரு பெண்ணின் கதாப்பாத்திரத்தை எனக்கு சித்தரிப்பது சவாலாகவும் அதே சமயத்தில் தனிப்பட்ட முறையில் வலுப்படுத்துவதாகவும் இருந்தது. ஒரு பெண்ணாக அம்முவுடன் தொடர்பு கொள்ள நிறைய இருக்கின்றது. அதில் முக்கியமானது எப்போதும் ஒருவரின் உண்மையை பேசுவதும் ஒருவரின் சுயத்திற்காக நிற்பது ஆகும். அம்மு பற்றிய பார்வையாளர்கள் கருத்துக்களுக்காக காத்திருப்பதாக கூறியுள்ளார்.