பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே ஜிபி முத்து தனலட்சுமிக்கு இடையே மோதல் இருந்ததாக நெட்டிசன்கள் கூறி வருகின்றார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்பொழுது ஆரம்பித்துள்ளது. இதில் சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகம் தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள். டிக் டாக் மூலம் பிரபலமாகிய ஜி.பி.முத்து இந்த சீசனில் போட்டியாளராக களம் இறங்கி இருக்கின்றார். முதல் நாள் பிக்பாஸ் வீட்டுக்குள் கமலால் அனுப்பப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான ஜி.பி முத்து வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கின்றார்.
இவருக்கு இணையத்தில் லெட்டர் படிக்கும் வீடியோக்கள் பார்ப்பதற்கு என்று தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. இந்த நிலையில் தற்போது பிக்பாக்ஸில் என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் டிக் டாக் செய்து கொண்டிருக்கும் போதே சக போட்டியாளரான தனலட்சுமி இடையே மோதல் இருந்ததாம். இதன் காரணத்தினாலே பிக்பாக்ஸிலும் இவர்கள் சண்டை தொடர்வதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றார்கள்.