உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அதிகமாக நிதி உதவி கிடைத்தால் ரஷ்யா மேற்கொள்ளும் போரை விரைவாக முடிவடைய செய்யலாம் என்று கூறியிருக்கிறார்.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ரஷ்யா மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதல்களால் வீடுகளும், குடியிருப்புகளும் மொத்தமாக அழிக்கப்பட்டிருக்கின்றன. எனவே அவற்றை மீண்டும் கட்ட கூடுதலாக பணம் தேவை என்று கோரிக்கை வைத்திருக்கிறார். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய வருடாந்திர கூட்டமானது, வாஷிங்டனில் நடந்தது.
அமைச்சர்களோடு காணொளி காட்சி மூலமாக ஜெலன்ஸ்கி உரையாடினார். அப்போது, அவர் தங்கள் நாட்டை மீண்டும் கட்டமைக்க வேண்டும் எனில் பல லட்சம் கோடி ரூபாய் வேண்டும் என்று கூறினார். மேலும் தங்களுக்கு உதவி எவ்வளவு விரைவில் கிடைக்கிறதோ, அவ்வளவு விரைவில் போருக்கு முடிவு கட்டிவிடுவோம் என்று கூறியிருக்கிறார்.