Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பலகாரங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனையாளர்கள் கவனத்திற்கு….!” மாவட்ட ஆட்சியர் அறிக்கை…!!!!!

தீபாவளி பண்டிகையையொட்டி பலகாரங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டியவை குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகை தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்பது பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிகளில் கட்டாயமாகப்பட்டிருக்கின்றது. இனிப்பு, கார வகைகள், பேக்கரி உணவு பொருட்களை தயாரிப்பவர்கள் தரமான மூலப் பொருட்களைக் கொண்டு சுகாதாரமாக தயாரித்து பாதுகாப்பான உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும்.

உணவு தயாரிப்பில் கலப்பட பொருட்களையோ அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக செயற்கை நிறங்களையும் உபயோகிக்க கூடாது. மேலும் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் காலாவதி இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணையை மறுபடியும் பயன்படுத்தக் கூடாது. இனிப்பு வகைகளை தயாரித்த தேதி உபயோகிக்கும் காலம் உள்ளிட்டவை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அச்சடித்து காட்சிப்படுத்த வேண்டும். இனிப்பு, கார வகைகள், பலகாரங்கள் வாங்கும் போது உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற உணவு நிறுவனங்களில் வாங்குமாறும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களில் விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்கமாறும் கேட்டுக்கொள்ளப்படுவதாக கூறியுள்ளார்.

Categories

Tech |