Categories
மாநில செய்திகள்

இவங்க எங்களை darket பண்ணுறாங்க…. முடிவுக்கு வந்த “ஓசி பஸ் சர்ச்சை”….. அமைச்சர் பொன்முடி பேட்டி….!!!!

அமைச்சர் ஒருவர் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஒரு கூட்டதில்  கலந்துகொண்ட  பொன்முடி சில கருத்துகளை பேசினார். அதில் பெண்கள்  பேருந்தில் எப்படி போறீங்க. இங்கிருந்து கோயம்பேடு போக வேண்டும் என்றாலும் அங்கிருந்து எங்கே போக வேண்டும் என்றாலும் எல்லாம் இலவச பேருந்தில்  தான் போறீங்க என்று பேசினார். இது தமிழகத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வேப்பேரி பகுதியில்  நடைபெற்ற கூட்டத்தில் பொன்முடி கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது. நான் அந்த கூட்டத்தில் பேசிய அந்த ஒரு வார்த்தை வைத்துக் கொண்டு என்னை எல்லா கட்சியினரும் என்னென்ன சொல்றாங்க அப்படின்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.  நமது முதலமைச்சர் என்னைப் பார்த்து இப்படி எல்லாம் ஏன் பேசினீங்க அப்படின்னு அறிவுரை வழங்கினார். ஆனால் பி.ஜே.பி எங்களை எல்லாம்  டார்கெட் செய்து சில பேர்களை தாக்க வேண்டும் என்று தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நான் தேசிய கருத்து யாரையாவது புண்படுத்தி இருந்தால் உண்மையாகவே நான் வருந்துகிறேன். நான் யாரையும் புண்படுத்த வேண்டும் என்று பேசவில்லை. அது ஒரு கலோக்கியலாக பேசுகிற வார்த்தை. எனவே என்னை மன்னித்து விடுங்கள் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |