Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: மாணவி கொலை ஏன் ? – பரபரப்பு தகவல் ..!!

சென்னை கிண்டியை அடுத்த ஆலந்தூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் சதீஷ்.  அதே பகுதியை சேர்ந்தவர்தான் சத்தியா. சத்தியா தி.நகர் பகுதியில் உள்ள ஜெயின் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சதீஷும்,  சத்யாவும் ஏற்கனவே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.சத்யா வீட்டிற்கு இந்த காதல் விவகாரம் தெரிய வரவே, அவர்கள் கண்டித்துள்ளனர்.

இதனால் சத்தியா சதீஷிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இன்று கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு சத்யா வந்து காத்திருந்துள்ளார். அப்போது சதீஷ் சத்யாவுடன் பேச்ச முற்பட்ட போது இருவருக்கும் சண்டை வந்துள்ளது. இதனால் கோபமடைந்த சதீஷ், சத்யாவை திட்டி உள்ளார். அப்போது கிண்டியை நோக்கி பரங்கிமலை வந்த ரெயிலில் சத்யா ஏறி செல்வதற்காக வேகமாக சென்றுள்ளார்.

அப்பொழுது கோபமடைந்த சதீஷ் திடீரென சத்யாவை ட்ரெயின் வருவதற்கு முன்பு தள்ளியுள்ளார். இதில் சத்யா சம்பவ இடத்திலேயே உடல்நசிகி உயிரிழந்துள்ளார் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தொடங்கியுள்ளது. ஏற்கனவே சத்யா படிக்கின்ற கல்லூரிக்கு சென்று சதீஷ் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இது சம்பந்தமாக டி.நகர் காவல் நிலையத்தில் சதிஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சதீஷை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |