Categories
தேசிய செய்திகள்

கருப்பாக பிறந்த பெண் குழந்தை… பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…. இப்படியும் ஒரு குடும்பமா….??

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 29 வயதான பெண்ணுக்கு கடந்த 2019 ஆம் வருடம் திருமணம் ஆனது. இவர் தனது கணவரோடு மும்பையில் உள்ள காமத்தேயில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் அந்த குழந்தை கருப்பாக இருந்ததாலும் ஆண் குழந்தை தான் வேண்டுமென்பதாலும் அந்த பெண்ணை கணவர் மற்றும் குடும்பத்தார் மனரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். மேலும் உடல் ரீதியாகவும் அடித்து துன்புறுத்து வந்துள்கார்கள்.

இதனையடுத்து இந்த பெண் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் படி விசாரணை செய்த போலீசார், கார் வாங்குவதற்காக அவருடைய கணவர் மற்றும் குடும்பத்தினர் 10 லட்சம் வரதட்சனை கேட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து அந்த பெண்ணையும் குழந்தையும் வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளனர். அன்று முதல் அவர்கள் பெற்றோர் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். இந்த புகாரில் தன்னுடைய கணவர் வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டு குழந்தையை கொன்று விடுவதாகவும் மிரட்டுதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |