கணவரை இழந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மஞ்சப்புதூரில் கணவரை இழந்த 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 2012 -ஆம் ஆண்டு அதே கிராமத்தில் வசிக்கும் கூலி தொழிலாளியான ஏழுமலை, ரவி ஆகிய இருவரும் இணைந்து இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு பின்புரம் இருக்கும் மாட்டு கொட்டைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் ரவி, ஏழுமலை ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் எழுமலைக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், 7 வருடங்கள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே ரவி இறந்துவிட்டார்.