தீபாவளி பண்டிகையை முன்னிட்டு HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்காக ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கடன் வட்டியில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியில் வீட்டு கடன்களுக்கான வட்டி 8.40 சதவீதமாக இருக்கும். இந்த சலுகை நவம்பர் 30-ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். இந்நிலையில் நீங்கள் தள்ளுபடி வட்டியை பெற வேண்டும் எனில் உங்களுடைய சிபில் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
இதனையடுத்து வீட்டுக் கடன் பேலன்ஸ் ட்ரான்ஸ்ஃபர், வீடு விரிவாக்கம் மற்றும் வீடு புதுப்பித்தல் ஆகிய பணிகளுக்கும் இந்த வட்டியில் கடன்களை பெற்றுக் கொள்ளலாம். அதோடு ஏற்கனவே வேறு வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கி இருப்பவர்கள் பேலன்ஸ் ட்ரான்ஸ்ஃபர் முறையில் HDFC வங்கிக்கு கடனை மாற்றிக் கொள்ளலாம். இதேபோன்று எஸ்பிஐ வங்கியும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் தள்ளுபடி அறிவித்துள்ளது.
அதன்படி 0.15% முதல் 0.30% வரை வட்டியில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஜனவரி 31-ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்பிஐ வங்கியானது வீட்டு கடன்களுக்கு பொதுவாக 8.55% முதல் 9.05% வரை வட்டி விதிக்கிறது. மேலும் சிபில் ஸ்கோருக்கு ஏற்ப வட்டி விகிதம் மாறும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், வீட்டுக் கடன்களுக்கான ப்ராசசிங் கட்டணத்தை எஸ்பிஐ வங்கி தள்ளுபடி செய்துள்ளது.