பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட உதவி பேராசிரியர்கள் போதிய தகுதி பெறவில்லை என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கல்வி தகுதி விவகாரத்தில் சமரசம் அல்லது அனுதாபம் காட்டக்கூடாது என கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் தகுதிகளை சரிபார்க்க வேண்டும் என நீதிபதி சுப்ரமணியன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கல்லூரிகளில் செய்யப்பட்ட நியமனங்கள் முறையானதா என்பதை கல்லூரி கல்வி இயக்குனர் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். இதனை அடுத்து பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட உதவி பேராசிரியர்களை கல்லூரி கல்வி இயக்கம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.