Categories
மாநில செய்திகள் வானிலை

மீனவர்களுக்கு அலர்ட்.! இன்று டெல்டா, தென் தமிழக மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் தென் தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதேபோல தென் தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும்  கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் குமரி கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்க கடல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அக்டோபர் 15, 16, 17 தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டையில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |