Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த வசூல் எவ்வளவு தெரியுமா…? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!!!

பொன்னியின் செல்வன் படத்திற்காக இதுவரை கிடைத்த வசூல் பற்றி லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யாராய், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா போன்றோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் இந்த படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் இந்த படத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த சூழலில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இதுவரை 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இருப்பதாக லேகா ப்ரொடக்சன் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து தீபாவளி வரை வேறு எந்த படங்களும் வெளியாகாத காரணத்தினால் இந்த படத்தின் வசூல் 500 கோடியை தாண்டும் என திரையரங்க உரிமையாளர்களின் கணிப்பாக இருக்கிறது. இதற்கிடையே பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் கோடை காலத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான பணிகளில் படக்குழுவினர் முழு வீச்சீல் ஈடுபட்டு வருகின்றார்கள்.

Categories

Tech |