திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சத்திரப்பட்டி எனும் இடத்தில் மூர்த்திஸ் என்ற திறந்தவெளி திரையரங்கம் திறக்கப்பட்டு இருக்கிறது. இந்த புது திறந்தவெளி திரையரங்கை திரைப்பட இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் மற்றும் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் போன்றோர் திறந்து வைத்தனர்.
இதையடுத்து இந்நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் பேசியதாவது “தமிழ் திரைப்படம் என்றாலே அது பொன்னியின் செல்வன் தான். இது தமிழ் சினிமாவில் பாராட்டக்கூடிய படமாக இருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தில் இயக்குனர் மணிரத்தினம் எனக்கு எதை சொல்லிக் கொடுத்திருக்கிறாரோ, அதனைத் தான் நான் செய்திருக்கிறேன்.
காதல் அதிகமாக இருப்பதனால் தான் இளமையாக இருக்கிறேன் என்று பார்த்திபன் கூறினார். இந்நிலையில் அங்கிருந்த ஒருவர் பார்த்திபனை பார்த்து ஐ லவ் யூ என கூறினார். அதற்கு பார்த்திபன், அவர் என்னை பார்த்து இப்படி கூறியதில் எனக்கு சந்தோசமும், வருத்தமும் இருக்கிறது. ஏனெனில் ஒரு ஆண் கூறியதால் வருத்தம் இருக்கிறது. எனினும் யாராவது கூறுகிறார்களே என்ற சந்தோசம் இருக்கிறது என்று அவர் பேசினார்.