அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, திமுகவை பொறுத்த வரைக்கும் பாத்தீங்கன்னா எப்போதுமே ஆட்சிக்கு வர வரைக்கும் தான்… சொன்ன வாக்குறுதியை நிறைவேத்திட்டோம், நிறைவேத்திட்டோம், சொல்றாங்களே… எங்க நிறைவேற்றினார்கள் ?
என்றைக்குமே டெண்டர் பக்கம் போனதில்லை எங்க அம்மாவோட முன்னேற்ற கழகம். உண்மையான தொண்டர்களாக இருக்கக்கூடிய இயக்கம்தான் எங்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். காசு கிடைக்குது என்பதற்காக அங்கேயும், இங்கேயும் போகாம, காசு முக்கியமல்ல, பதவி முக்கியமல்ல, அண்ணா திமுக என்கிற ஒரு மாபெரும் இயக்கம்…
எனக்கு பின்னாலும் நூறு வருடம் இருக்கணும்னு சொல்லிட்டு போனாங்களே அம்மா… அந்த வார்த்தையை காப்பாற்ற வேண்டும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பாடுபடுகிற மேடையில் நிற்பவர்களும் சரி… அங்கே இருப்பவர்களும் சரி… எல்லாரும் மேடைல தான் நிக்கிறோம்…
இங்கே இடமில்லாமல் கீழே நிக்கிறீங்க அவ்வளவுதான். நீங்க கீழ நிற்கிறதாலையோ, நாங்க மேல நிக்கிறதாலையோ வேற கிடையாது. நம்முடைய பொதுச்செயலாளர் டிடிவி சொல்வாரு.. நானும் கட்சியில் ஒரு தொண்டன் தான். பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக பொதுச்செயலாளர் பதவியில் இருக்கிறேனே தவிர நானும் ஒரு தொண்டன் தான் என சொல்லுவாரு என தெரிவித்தார்.