Categories
மாநில செய்திகள்

மதுரை – விழுப்புரம் ரயில் சேவை …. ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பல பகுதிகளிலும் தண்டவாளம் மற்றும் சிக்னல்கள் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் அப்போபோது மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.அவ்வகையில் தற்போது மதுரை மற்றும் விழுப்புரம் இடையேயான ரயில் போக்குவரத்தில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.அதன்படி மதுரை மற்றும் விழுப்புரம் இடையே தினமும் காலை 4.05 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில், வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையும், 26 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையும் மதுரை மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது.

குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே இந்த ரயில் காலை 5.5 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்படும். மேலும் 26 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 2.30 மணி நேரம் தாமதமாக காலை 8.10 மணிக்கு இராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி புறப்படும்.அதே சமயம் எதிர் திசையில் இருந்து மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு மதியம் 12.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் குறிப்பிட்ட நாட்களில் 40 நிமிடங்கள் தாமதமாக அதாவது மதியம் 1.10 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் செல்லும் என்று பயணிகளுக்கு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Categories

Tech |