Categories
மாநில செய்திகள்

பாசஞ்சர் ரயில் இன்று முதல் 30 ஆம் தேதி வரை ரத்து…. ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

கோவை மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி தண்டபான பராமரிப்பு பணி காரணமாக தினசரி இயக்கப்பட்டு வந்த சேலம் மற்றும் கோவை பேசஞ்சர் ரயில் இன்று முதல் வருகின்ற 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு திருப்புவார்கள். அதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் பட்சத்தில் தற்போது பொதுமக்கள் அதிகம் பயணம் செய்யும் இந்த நேரத்தில் பேசஞ்சர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் இதற்கு பதிலாக சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Categories

Tech |