Categories
சினிமா தமிழ் சினிமா

“வரலாற்று படங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் பொன்னியின் செல்வன்” சரித்திரத்தை நோக்கி திரும்பும் தமிழ் சினிமா…..!!!!

பிரபல இயக்குனர் ராஜமவுலியின் பாகுபலி திரைப்படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இதுபோன்ற சரித்திர படங்கள் ஹிந்தியில் எடுக்கப்பட்ட நிலையில், தமிழில் படங்களை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் சரிவர முன்வரவில்லை. ஏனெனில் சரித்திர படங்கள் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்குமா என்ற சந்தேகம் இருந்ததால் பெரும்பாலும் சரித்திர படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி உலக அளவில் 400 கோடி வரை வசூல் சாதனை புரிந்து வெற்றி கரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தற்போது சரித்திர படங்களை இயக்குவதில் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதோடு பல்வேறு வரலாற்று நாவல்களை இயக்குனர்கள் புரட்டி பார்த்து கதையைத் தேடி வருகின்றனர். நடிகர் சூர்யாவின் 42-வது படமும் சரித்திர படமாக உருவாவதால் ரசிகர்கள் மத்தியில் தற்போது இருந்தே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே தமிழில் எடுக்கப்பட்ட சரித்திர படங்கள் பட்ஜெட் பிரச்சனை காரணமாக பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த படங்களை மீண்டும் இயக்குவதற்கு தற்போது இயக்குனர்கள் முன் வந்துள்ளனர். கமல்ஹாசன் நடிப்பில் உருவான மருதநாயகம் திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இயக்கப்பட்ட நிலையில், படத்தின் சூட்டிங் 4 நாட்கள் மட்டும் நடைபெற்ற நிலையில், அப்படியே படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டது.

அதேபோன்று சுந்தர் சி இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா நடித்த சங்கமித்ரா திரைப்படம், கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருந்த ராணா திரைப்படம், விக்ரம் நடிப்பில் ஆதித்த கரிகாலன் வாழ்க்கையை மட்டும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆதித்த கரிகாலன் வரலாற்று படம் போன்றவைகள் முடங்கி கிடக்கிறது. இதனையடுத்து வடிவேல் நடிப்பில் உருவான இம்சை அரசன் 23-ம் புலிகேசி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதன் 2-ம் பாகத்தை எடுப்பதற்கு இயக்குனர் சங்கர் முடிவு செய்தார். ஆனால் வடிவேலுக்கும், சங்கருக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சில பிரச்சனைகளின் காரணமாக வடிவேலு திட்ட வட்டமாக படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். இதன் காரணமாக படத்தின் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும் இப்படி நின்று போன பல வரலாற்று படங்களுக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் உயிர் கொடுக்க போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Categories

Tech |