Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூரில் 48-வது பின்னலாடை கண்காட்சி”….. நாளை வரை மட்டுமே….!!!!!

திருப்பூரில் பின்னலாடை கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது.

திருப்பூர் அருகே இருக்கும் பழங்கறையில் உள்ள ஐ.கே.எப் வளாகத்தில் சர்வதேச அளவிலான 48வது பின்னலாடை கண்காட்சி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சி பல்வேறு மாநிலங்களில் இருந்து 66 பின்னலாடை உற்பத்தியாளர்கள் அரங்குகளை அமைத்தார்கள்.

இந்த கண்காட்சியை அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கன்னடா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வர்த்தக ஏஜென்சிகள் பார்வையிட வருகின்றார்கள். இந்த கண்காட்சியை அமைச்சர் மு.பே.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியானது நேற்று தொடங்கி வெள்ளிக்கிழமை (நாளை) வரை நடைபெறுகின்றது.

Categories

Tech |