Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் மின் கட்டணம் செலுத்துபவர்களுக்கு….. வெளியான மிக முக்கிய ALERT அறிவிப்பு…!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் எல்லோரும் ஆன்லைன் மூலமாக பரிவர்த்தனை செய்து வருகின்றனர். சாதாரண கடைகள் முதல் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் வரை அனைத்து இடங்களிலும் டெபிட் கார்டு கிரெடிட் கார்டு வசதிகள் உள்ளது. இந்த ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளில் எஸ்எம்எஸ், லிங்குகள் மூலம் பலவிதமான மோசடிகளும் அரங்கேறி வருகிறது. இதனால் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் மின் கட்டணம் செலுத்துபவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக எஸ்எம்எஸ் வந்த வண்ணம் உள்ளது.

அதாவது உங்களுடைய கடந்த மாதம் மின்கட்டணம் இன்னும் செலுத்தவில்லை எனவே இன்று இரவுக்குள் உங்களுடைய மின் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே அதனை உடனடியாக கட்ட வேண்டும். மேலும் மின்வாரிய அதிகாரியை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். அது மட்டும் இன்றி சில எஸ்எம்எஸ்கலில் செலுத்திய விவரத்தை whatsapp எண்ணிற்கு அனுப்பி வைக்கவும் என்று கூறுகின்றனர். தற்போது மின்கட்டணத்தை சரியாக செலுத்தியவர்களுக்கும் எஸ்எம்எஸ் வருவது பயனர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த தமிழக மின்வாரியம் இது போன்ற எஸ்எம்எஸ் முற்றிலும் போலியானவை. இந்த எஸ்எம்எஸ் தமிழக மின்வாரியம் அனுப்பவில்லை என்று தெளிவு படுத்தி உள்ளது.

Categories

Tech |