13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஐரேனிபுரம் பகுதியில் ஜான் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2009- ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக அதே பகுதியில் வசிக்கும் மரியா அந்தோணி என்பவர் ஜான் சதீஷ்குமாரை 2 பேருடன் இணைந்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதித்த போலீசார் மரிய அந்தோணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனை அடுத்து ஜாமீனில் வெளியே வந்த மரிய அந்தோணி 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருந்த மரிய அந்தோணியை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.