Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டு கிடா விருந்து…. சிறுமிக்கு நடந்த கொடுமை …. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜா(34) என்ற மகன் உள்ளார். லாரி ஓட்டுனரான ராஜாவுக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு உறவினர் வீட்டில் நடைபெற்ற கிடா விருந்தில் கலந்து கொள்வதற்காக ராஜா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார். அப்போது உறவினரின் மகளான 11- ஆம் வகுப்பு மாணவி குளியல் அறையில் இருக்கும் போது ராஜா அங்கு சென்று அவரது வாயில் துணியை வைத்து கட்டி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார் இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஈரோடு மகளிர் நீதிமன்றம் ராஜாவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Categories

Tech |