இயக்குனர் சமர் இயக்கும் “சீன் நம்பர் 62” திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற பாடகி நஞ்சம்மா பாடியுள்ளார்.
“ஆதாம்” என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள தமிழ் திரையுலகில் தடம் பதித்த இயக்குனர் சமர் இயக்கும் முதல் தமிழ் படம் “சீன் நம்பர் 62”. இந்தத் திரைப்படத்தை நிக்கில் ராமச்சந்திரனின் பவன்புத்ரா பட தயாரிப்பு நிறுவனமும், வேணுஜி ராமின் நவமுகுந்தா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கின்றது. இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா நந்தன், கோகிலா கோபால், கதிரவன், அமல் தேவ், ஜாய்ஸ் மற்றும் வி. ஜே. வைத்தி, போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்தில் ஜிகேவி இசை அமைக்கின்றார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு வருகின்றார் தேசிய விருது பெற்ற பாடகி “நஞ்சம்மா”.
இதனை அடுத்து சிவபிரகாசம் எழுதியுள்ள “என் சேவல்” என்ற பாடலை பாடியுள்ளார். அவருடன் வேல்முருகன் இணைந்து பாடியுள்ளார். இதனை தொடர்ந்து ஆங்கிலம் கலக்காமல் தமிழ் மட்டுமே பயன்படுத்தி முழு பாடலையும் எழுதியுள்ளார் சிவபிரகாசம். மேலும் சென்னை, புதுச்சேரி, கொடைக்கானல், பொள்ளாச்சி மற்றும் கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.