Categories
மாநில செய்திகள்

“கிராம உதவியாளர் பணிகள்” விண்ணப்பிப்பது எப்படி….? இதோ முழு தகவல்….!!!!

தென்காசி மாவட்டத்தில் காலியாக இருக்கும் கிராம உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ப. ஆகாஷ் அறிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கிராம உதவியாளர் பணிகள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களில் மூப்பு அடிப்படையிலும், உரிய கல்வி தகுதி, படித்தல் மற்றும் எழுதுதல் திறனறிவு தேர்வு, நேர்முகத் தேர்வு போன்றவைகள் மூலமாகவும் நிரப்பப்பட இருக்கிறது. எனவே தகுதியான நபர்கள் அக்டோபர் 10-ம் தேதி முதல் நவம்பர் 7-ஆம் தேதி வரை மாலை 5.45 மணிக்குள் இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இதனையடுத்து தென்காசி வட்டத்தில் சிவசைலம், குத்துக்கல்வலசை, சில்லறைப்புரவு, பாட்டாக்குறிச்சி, பாட்டப்பத்து, கீழ் ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி பகுதி 2, ஆவுடையானூர், குணராம நல்லூர் உள்ளிட்ட 9 கிராமங்களில் காலி பணியிடங்கள் இருக்கிறது. அதன் பிறகு செங்கோட்டை வட்டத்தில் நாகல் காடு, வடகரை கீழ்பிடாகை, இலத்தூர், வல்லம், நெடுவயல், கணக்கப்பிள்ளை வலசை ஆகிய 6 கிராமங்களிலும், ஆலங்குளம் வட்டத்தில் நெட்டூர், சுப்பையாபுரம், மாயமான் குறிச்சி, கீழப்பாவூர் பகுதி 2, மாறாந்தை, சிவலாரகுளம், துப்பாக்குடி, அணைந்த பெருமாள் நாடானூர் உள்ளிட்ட 8 கிராமங்களிலும் காலிப்பணியிடங்கள் இருக்கிறது.

இதைத்தொடர்ந்து கடையநல்லூர் வட்டத்தில் நகரம், தி.நா புதுக்குடி, தலைவன் கோட்டை, சிந்தாமணி, புளியங்குடி, பொய்கை, கிளாங்காடு, கடையநல்லூர், சேர்ந்தாமங்கலம், நயினாரகம் உள்ளிட்ட 10 கிராமங்களிலும், வீரகேரளம்புதூர் வட்டத்தில் ஆனைகுளம், வெள்ளகால், வடக்கு காவாலங்குறிச்சி, வீராணம், வாடியூர், ராஜகோபாலபேரி உள்ளிட்ட 6 கிராமங்களிலும், சிவகிரி வட்டத்தில் அரியூர், ராமநாதபுரம், இனாம் கோவில்பட்டி உள்ளிட்ட 3 கிராமங்களிலும், சங்கரன்கோவில் வட்டத்தில் பனையூர், பந்தப்புளி, சங்கரன்கோவில், வடக்கு புதூர், கரிவலம் வந்தவநல்லூர் உள்ளிட்ட 5 கிராமங்களிலும், திருவேங்கடம் வட்டத்தில் மதுராபுரி, மருதங்கிணறு, சுப்பையா புரம், திருவேங்கடம், கலிங்கப்பட்டி பகுதி 1 மற்றும் வாகைகுளம் உள்ளிட்ட 6 கிராமங்களிலும் காலி பணியிடங்கள் இருக்கிறது.

இந்நிலையில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்த வட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறீர்களோ அந்த வட்டத்தில் ஒரு பகுதிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அதோடு பொது பிரிவினருக்கு விண்ணப்பிப்பதற்கு அதிகபட்சமாக 32 வயதும், இதர பிரிவினருக்கு அதிகபட்சமாக 37 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஆதரவற்ற விதவைகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினற்கு அரசு ஆணைகளின் படி வயது தளர்வுகள் வழங்கப்படும்.

அதன் பிறகு சைக்கிள் ஓட்ட தெரிந்தவராகவும், எழுதப் படிக்க தெரிந்தவராகவும் இருப்பதோடு, கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் போது மற்றொருவரை திருமணம் செய்தவராகவும் இருக்கக் கூடாது. மேலும் இருப்பிடச் சான்று ஒளி நகல், ஜாதி சான்று நகல், வேலை வாய்ப்பு பதிவு செய்ததன் நகல், ஆதார் அடையாள அட்டை நகல், குடும்ப நல அட்டை நகல், பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் கல்வி சான்றிதழ் நகல், ஆதரவற்ற விதவை மற்றும் மாற்றுத்திறனாளியாக இருப்பின் அதற்குரிய சான்றிதழ் நகல், முன்னாள் ராணுவத்தினராக இருந்தால் அதற்குரிய சான்றிதழ் நகல், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் நகல் போன்ற ஆவணங்களை வைத்து https://www.tn.gov.in, https://cra.tn.gov.in, http://tenkasi.nic.in என்கிற 3 இணையதள முகவரியில் ஏதாவது ஒன்றில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Categories

Tech |