பணம் கேட்டு மிரட்டி கடையை அடைத்து நொறுக்கி நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள சாலிகிராமம் புஷ்பா காலனியில் நடிகை மாயா வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் குமார் என்ற மகன் உள்ளார். இவர் நடிகை பாபிலோனாவின் சகோதரர் ஆவார். இவர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. நேற்று முன்தினம் விக்னேஷ் குமார் சேர்மதுரை என்பவரின் டீக்கடைக்கு சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது சேர்மதுரை பணம் தர மறுத்ததால் விக்னேஷ் குமார் கடையை அடித்து நொறுக்கியுள்ளார்.
இதுகுறித்து சேர்மதுரை போலீசருக்கு தகவல் தெரிவித்தார். அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விக்னேஷ் குமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது பணியில் இருந்த போலீசாரிடமும் விக்னேஷ் போதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விக்னேஷ் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.