போலியான ஆவணம் தயாரிப்பு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்லாநத்தம் மேற்கு தெருவில் அண்ணாமலை(55) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு அண்ணாமலை அதே பகுதியில் வசிக்கும் அண்ணன் தம்பியான சிவகுமார்(37), திருப்பதி(31) ஆகியோரிடம் 1 லட்ச ரூபாயை கடனாக வாங்கி தனது 2 சென்ட் இடத்திற்கான பாத்திரத்தை அடமானம் வைத்துள்ளார். இதனை அடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு அண்ணாமலையின் மகனான அருள்(29) என்பவர் அசல், வட்டியமாக சேர்த்து ஒரு லட்சத்து 12 ஆயிரம் பணத்தை அண்ணன் தம்பியிடம் கொடுத்துள்ளார்.
அப்போது சிவகுமாரும், திருப்பதியும் உங்களது பத்திரத்தை கொடுத்துவிட்டு அசலை வாங்கிக் கொள்கிறோம். இப்போது 12000 ரூபாய் மட்டும் தாருங்கள் என கூறியுள்ளனர். இதனால் அருள் 12,000 ரூபாயை மட்டும் கொடுத்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஆத்தூரில் இருக்கும் தனியார் நிறுவனத்திலிருந்து அண்ணாமலையின் பெயரில் பெற்ற கடனை செலுத்துமாறு நோட்டீஸ் வந்தது.
இதுகுறித்து விசாரித்த போது சிவக்குமார் தனது மனைவி சித்ரா, சகோதரி வேலு, ஊனத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் பாலு ஆகியோருடன் இணைந்து போலியான ஆவணம் தயாரித்து அண்ணாமலைக்கு சொந்தமான பத்திரத்தை நிதி நிறுவனத்தில் அடகு வைத்து 5 லட்ச ரூபாய் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதுகுறித்த புகாரின் பெயரில் வழக்குப்பதிந்த போலீசார் சிவக்குமார் உள்பட 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.