Categories
உலக செய்திகள்

ராணியாக பதவியேற்க போகும் கமிலா…. சாமர்த்தியமாக கடந்து வந்த பாதைகள்…!!

பிரிட்டன் மன்னருடன் அடுத்த வருடம் மே மாதத்தில் அவரின் மனைவி கமீலாவும் ராணியாக பதவியேற்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவை அதிகம் நேசித்த நாட்டு மக்களால் கமிலாவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேலும், சார்லஸ்-டயானாவின் பிள்ளைகளான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரியும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை நன்கு உணர்ந்திருந்த கமிலா  டயானாவிற்கு வழங்கப்பட்டிருந்த வேல்ஸ் இளவரசி பட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

அதாவது மக்கள் மிகவும் நேசிக்கும் டயானாவின் பட்டத்தை தான் பறித்து விட்டால் மேலும் மக்களுக்கு தன் மீது உள்ள கோபம் அதிகரித்து விடும் என்று சாமர்த்தியமாக அந்த முடிவை எடுத்திருக்கிறார். இந்நிலையில் மகாராணியார் மரணமடைந்த பின் அவரின் மகன் சார்லஸ் நாட்டின் மன்னராகிவிட்டார்.

பிரிட்டனின் மரபு படி, நாட்டை ஆள்பவர் பெண்ணாக இருந்தால் அவர் மகாராணி என்றும் அவரின் கணவர் இளவரசர் என்றும் அழைக்கப்படுவர். இதேபோன்று ஒரு ஆண் நாட்டை ஆளும் பட்சத்தில், அவர் மன்னர் என்றும் அவரின் மனைவி ராணி என்று அழைக்கப்படுவார். ஒரு காலத்தில் மக்கள் கமிலாவை வெறுத்தாலும் இளவரச தம்பதி ஹாரி-மேகன், இளவரசர் ஆண்ட்ரு  போன்றோர் அரச குடும்பத்தின் பொறுப்பை விட்டு விலகிய சமயத்தில் அவர் பொறுப்பாக செயல்பட்டது மகாராணியாரை ஈர்த்திருக்கிறது.

எனவே கமிலாவை, queen consort என்று அழைக்குமாறு மக்களிடம் மகாராணி கூறினார். இந்நினையில், அடுத்த வருடம் மே மாதம் ஆறாம் தேதி அன்று சார்லஸ் மன்னராக முடிசூடும் நாளில் சிறிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தி அதில் கமிலா ராணியாக பதவியேற்கவிருக்கிறார்.

Categories

Tech |