விஜய் ஆண்டனியின் ட்விட்டர் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவரின் இசை மற்றும் படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். தற்போது இவர் ரத்தம், பிச்சைக்காரன் 2, கொலை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும், படங்களுக்கு இசையமைக்கும் பணிகளையும் தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில், விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அதில் அவர், “உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க. அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க. கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க” என பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் இவர் வீட்டில் ஏதாவது பிரச்சனையா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.