நடிகை சாய் பல்லவி தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து, தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சாய்பல்லவி நடித்த ஷியாம் சிங்கராய் படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விமர்சகர் விருது வழங்கப்பட்டது.
மேலும், லவ் ஸ்டோரி படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதும் இவருக்கு கிடைத்தது. இந்நிலையில், விருதைப் பெற்றுக் கொண்ட சாய் பல்லவி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவள். படக்குழு மற்றும் அனைவருக்கும் நன்றி’ என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.