தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் படிப்பில் அரசு கவனம் செலுத்தி பல முக்கிய திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நாளை ‘தி ரெட் பலூன்’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது.
அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் மாதந்தோறும் 2-வது வாரம் திரையிடப்படுகின்றன. அதன்படி, பிரெஞ்சு மொழியில் ஆஸ்கர் விருது பெற்ற தி ரெட் பலூன் திரைப்படம் நாளை திரையிடப்பட உள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை பயன்படுத்தி படத்தை திரையிட வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.