Categories
உலக செய்திகள்

இப்படியும் நடக்குமா….? தாய்ப்பாலில் குழந்தைகளுக்கு ஆபத்து…. அதிர்ச்சியில் உறைந்த ஆராய்ச்சியாளர்கள்….!!!!

இந்த உலகிலேயே மிக மிக தூய்மையானது எது என்றால் அது தாய்ப்பால் மட்டும் தான் . ஆனால் இப்போது அப்படி கூறுவதை மறந்துவிட வேண்டியது என்பது போன்ற ஆராய்ச்சி முடிவு வெளியாகி உள்ளது. இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் காணப்பட்டது ஆராய்ச்சியாளர்களை மட்டுமின்றி இந்த செய்தியை கேட்பவர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ரோமில் குழந்தை பெற்றெடுத்து ஒரு வாரம் ஆன 34 தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பால் பெற்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் 75% பாலில் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கில் தாலெட்டுகள் போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளது.

இது குழந்தைகளின் உடலில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமோ என்று ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான விரிவான ஆய்வு அவசியம் என்றும் பரிந்துரைக்கின்றனர். பிளாஸ்டிக்கால் பேக் செய்யப்பட்ட உணவுகள், கடல் உணவுகள் குறித்து எச்சரிக்கும் ஆய்வாளர்கள் சுற்றுச்சூழலில் எங்கும் நிறைந்திருக்கும் பிளாஸ்டிக் துகள்கள் ஆப்பத்தை தவிர்க்க முடியாததாக மாற்றுகிறது என்று எச்சரிக்கின்றனர். ஏற்கனவே நஞ்சு கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |