Categories
உலக செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல்…. அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்படுமா?….

இங்கிலாந்து கடனிலிருந்து மீள்வதற்காக அரசு பணியாளர்கள் 2 லட்சம் பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அதிரடி தகவல் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டிடியூட் பார் பிஸ்கல் ஸ்டடீஸ் என்ற பிரிட்டன் நாட்டின் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம்,இங்கிலாந்து கடனிலிருந்து மீள்வதற்கு அரசு பணியாளர்களை பணி நீக்கம் செய்யுமாறு ஆலோசனை கூறியிருக்கிறது. அதன்படி, இந்த வருடத்தில் மட்டும் பணியாளர்கள் ஒரு லட்சம் பேர் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் புதிய அதிபரான லிஸ் ட்ரஸ் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவர், அரசு பணியாளர்களை பணி நீக்கம் செய்வதால் அரசாங்கத்திற்கு ஆகும் செலவை குறைக்க முடியும் என்று திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த வருடத்தில் மட்டும் பணியாளர்கள் ஒரு லட்சம் பேர் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் பிற பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்திலும் பணவீக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் பணியாளர்கள் ஒரு லட்சம் பேரை பணிநீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |