அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா தலீபான்களால் துப்பாக்கியால் சுட்டு சமீபத்தில் 10 வருடங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து தன் தாய்நாடான பாகிஸ்தானுக்கு சென்றிருக்கிறார்.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மலாலா யூசப்சாய் கடந்த 2012 ஆம் வருடத்தில் தன் 15 வயதில் தலீப்பான்களால் சுடப்பட்டார். அவரின் தலையை குண்டு துளைத்தது. லண்டனுக்கு சென்று உயர் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். தற்போது இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்து வரும் அவர் உயிருக்கு ஆபத்து நேர்ந்த சமயத்திலும், தொடர்ச்சியாக பெண் குழந்தைகள் முன்னேற்றமடைய வேண்டும் என்பதற்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த 2014 ஆம் வருடத்தில் அமைதிக்கான நோபல் பரிசு வென்றார். இந்நிலையில் துப்பாக்கி தாக்குதல் நடந்த பின் நாட்டிலிருந்து வெளியேறிய அவர் 10 வருடங்கள் கழித்து தன் சொந்த நாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு கனமழையால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு செல்ல இருக்கிறார். தலிபான்கள் துப்பாக்கியால் சுட்ட பின், அவர் பாகிஸ்தான் நாட்டிற்கு இரண்டாம் தடவையாக செல்கிறார்.