Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

போடு ரகிட ரகிட….. தொடரை கைப்பற்றிய மகிழ்ச்சி….. டான்ஸ் ஆடிய இந்திய வீரர்கள்…. வைரலாகும் வீடியோ.!!

ஷிகர் தவான் உட்பட இந்திய அணி வீரர்கள் தலேர் மெஹந்தியின் ‘போலோ தாரா ரா’ பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாபிரிக்கா அணி 3 டி20 தொடர் மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியும், இந்தியா ஒரு வெற்றியும் பெற்ற நிலையில், இரு அணிகளுமே 1:1 என சமநிலை வகித்தது..

இந்த நிலையில் நேற்று டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 27.1 ஓவரில் 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.. இந்திய அணியில் குல்தீப் யாதவ் 4.1 ஓவர் வீசி 18 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

மேலும்  வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஷபாஷ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி 19.1 ஓவரில் 3 விக்கெட் இழந்து 105 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. சுப்மன் கில் 49 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 28 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் தொடரையும் கைப்பற்றி கோப்பையை வென்றது.

இதையடுத்து கோப்பையை வாங்கிய ஷிகர் தவான் முகேஷ் குமாரிடம் கொடுத்தார். இதையடுத்து முகேஷ் குமார் கோப்பையை உயர்த்தி பிடித்த நிலையில், இந்திய அணி வீரர்கள் மொத்தமாக போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். இதனைத்தொடர்ந்து வெற்றி மகிழ்ச்சியில் ஷிகர் தவான் உட்பட இந்திய அணி வீரர்கள் தங்களது அறையில் தலேர் மெஹந்தியின் ‘போலோ தாரா ரா’ பாடலுக்கு நடனமாடினர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Categories

Tech |