Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன இப்படி சொல்லிட்டாங்க!…. விக்னேஷ்க்கு தல ரசிகர்கள் வைத்த கோரிக்கை…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக கவனம் பெற்றார். அந்த படத்தின் போது தான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டது. அதன் பிறகு ஏழு வருடங்களாக காதலித்து கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் தற்போது குழந்தை பிறந்துள்ளதாக சில நாட்களுக்கு‌முன் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியாகி திருமணம் ஆகிய நான்கே மாதங்களில் எப்படி குழந்தை பிறந்தது என்று கேட்டு வந்தனர். அதன் பிறகு தான் வாடகைதாய் மூலம் குழந்தை பிறந்தது தெரிய வந்தது. இதனால் தற்போது பல சர்ச்சைகள் வெடித்து வருகிறது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தின் ஏகே62 படத்தை இயக்க உள்ளார். எனவே அஜித் ரசிகர் ஒருவர் அதனைப் போல வேகமாக ஏகே62 படத்தையும் விரைவில் வெளியிடுமாறு விக்னேஷ் சிவனிடம் கோரிக்கை வைத்துள்ளார். தற்போது இந்த ட்வீட் செம வைரலாகி வருகிறது.

Categories

Tech |