Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கலங்கரை விளக்கம்-கிண்டி இடையே 11 கி.மீ மேம்பாலம்”…. ஒப்பந்தபுள்ளி கோரிய நெடுஞ்சாலைத்துறை…!!!!!

கலங்கரை விளக்கத்திலிருந்து கிண்டி வரை 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயரமான மேம்பாலம் அமைக்கும் திட்டத்திற்கான சாத்தியக்கூறு தாயரிக்க ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு இருக்கின்றது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அவ்வகையில் சென்னை மாநகரில் இருக்கும் கலங்கரை விளக்கத்திலிருந்து கிண்டி வரை 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டத்திற்கான சாதிய கூறு அறிக்கையை தயாரிக்க தமிழக நெடுஞ்சாலை துறை ஒப்பந்தபுள்ளி கோரி இருக்கின்றது.

இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியுள்ளதாவது, சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மாநில நெடுஞ்சாலை துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து 2,000 கோடி செலவில் 9 மேம்பாலங்கள் கட்டுவதற்கு ஒப்பந்தப்புள்ளி அளிக்கப்பட்டிருக்கின்றது. மேம்பாலங்கள் மற்றும் கலங்கரை விளக்கம் முதல் இன்று வரை நான்கு வழி சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு முன்பு தற்போது சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்கள்.

Categories

Tech |