Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் திடீர் போராட்டம்”…. பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்….!!!!!

தூத்துக்குடியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் திடீர் போராட்டம் நடத்தினார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் வடக்கு பீச் ரோட்டில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்துக்கு உட்பட்ட விக்டோரியா பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் 40 ஆசிரியர்கள் மற்றும் 30 ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் வேலை செய்து வருகின்றார்கள். காலாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பள்ளி முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அப்போது அவர்கள் கூறியதாவது, எங்களுக்குச் சென்ற இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. காலாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் எங்களுக்கு குறைவான ஊழியத்தை வழங்குகின்றார்கள். இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது எங்களை தரக்குறைவாக பேசுகிறார்கள். எங்களுக்கு முறையான ஊதியமும் பணி பாதுகாப்பும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றார்கள்.

Categories

Tech |