Categories
சினிமா

“என் அம்மா தப்பானவர்”…. பிரபல தமிழ் நடிகை கண்ணீர் மல்க பேட்டி….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சங்கீதா. இவர் பல திரைப்படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்த ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் இவர் தனது குடும்பம் குறித்து மனம் திறந்து பேசி உள்ள ஒரு பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது குடும்ப சூழல் காரணமாக 14 வயது இருக்கும் போதே தன்னை நடிக்க அனுப்பி விட்டதாக சங்கீதா தெரிவித்துள்ளார். தன்னுடைய சகோதரர்கள் குடிகாரர்கள் என்றும் தன் அம்மா ஊதாரித்தனமாக செலவு செய்பவர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மொத்த குடும்ப சுமையையும் என் மீது சுமத்தி நடிக்க வைத்தார்கள். என் வாழ்க்கையை பொருத்தவரை என் அம்மா தப்பானவர் என கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.

Categories

Tech |