ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களிலும் மக்கள் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் விதமாக அந்தந்த பண்டிகைகுரிய பொருட்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும்.
இந்நிலையில் மழையில் நனைந்த பொருட்களை மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்று கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் மழை மற்றும் புயல் காரணமாக பாதிப்புக்கு உள்ளான தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளை உயர்வான பகுதிகளுக்கு உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரிசி, மண்ணெண்ணெய், உப்பு, மெழுகுவர்த்தி, அவசரகால் விளக்கு மற்றும் தீப்பெட்டிகள் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும். மழையால் நனைந்த அரிசி, சர்க்கரை மற்றும் பிற அத்தியாவசியா பொருட்கள் வினியோகக்கப்பட்டு புகார் ஏதேனும் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலகமீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.