உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆர்டர் செய்த கை கடிகாரத்திற்கு பதிலாக மாட்டு சாணத்தை flipkart அனுப்பி வைத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் நீளம் யாதவ் என்பவர் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி பிளிப்கார்ட் இன் பிக் பில்லியன் டேஸ் ஆஃபரில் 1034 ரூபாய் மதிப்புள்ள ரிஸ்ட் வாட்சை டெலிவரின் போது பணம் செலுத்தும் வகையில் cod முறையில் ஆர்டர் செய்துள்ளார்.
அந்த வாட்ச் 9 நாட்கள் கழித்து கடந்த அக்டோபர் ஏழாம் தேதி தான் டெலிவரி செய்யப்பட்டது. அதனை அந்த நபர் தன்னுடைய சகோதரர் ராவேந்திராவுக்கு ஆர்டர் செய்திருந்தார். டெலிவரி செய்யப்பட்ட பிறகு வாட்சை பார்ப்பதற்கு ஆர்வமாக பார்சலை பிரித்து பார்த்த ராவேந்திராவுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது . அதாவது அதில் வாட்சிக்கு பதில் மாட்டு சாணத்தால் ஆன நான்கு வரட்டிகளே இருந்துள்ளது.அதன் பிறகு ஆர்டரை டெலிவரி செய்தவரை அழைத்து உடனடியாக ரிட்டன் செய்ததோடு கொடுத்த பணத்தையும் திரும்ப பெற்றனர். இது போன்ற குழப்பங்களில் இருந்து தப்பிக்க பிளிப்கார்ட்டில் ஓபன் பாக்ஸ் டெலிவரி என்ற அம்சமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.