Categories
தேசிய செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு” கூடுதல் வரி செலுத்தப்படுகிறதா…? இதோ முழு தகவல்….!!!!!

இந்தியாவில் சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது உயர்த்தப்பட்டது. இதனால் தற்போது அகவிலைப்படியானது 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இதில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் வழங்கப்படுகிறது. இந்த அகவிலைப் படியினால் 41.85 லட்சம் அரசு ஊழியர்களும், அகவிலைப்படி நிவாரணத்தினால் 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுகின்றனர். இந்நிலையில் மத்திய அரசானது ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப் படியை உயர்த்தி வழங்குகிறது.

இந்த அகவிலைப்படியானது பண வீக்கத்தை பொறுத்து கணக்கிடப்படுகிறது. அதன் பிறகு அகவிலைப்படியில் 6 மாதங்களுக்கு ஒரு முறை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதால், ஊழியர்களை நிதி சிக்கல் இல்லாமல் காப்பாற்றுகிறது. இதனையடுத்து தற்போது அகவிலைப்படி எப்படி கணக்கிடப்படுகிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதாவது அகவிலைப்படி என்பது ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையாக கணக்கிடப்படுகிறது. இது ஹெச்ஆர்ஏ போன்ற பிறவகையான சம்பளத்துடன் சேர்க்கப்படுகிறது.

ஹெச்ஆர்ஏ என்பது ஒரு ஊழியர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கும் போது அந்த வாடகை பணத்தை கொடுப்பதற்கு ஆகும் செலவை முதலாளி வழங்குவது போன்றதாகும். இது தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் 2 பேருக்குமே பொருந்தும். அதன் பிறகு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படிக்கு முழுமையாக வரி விதிக்கப்படும். மேலும் ஊழியர்கள் வாங்கும் சம்பளம் மற்றும் அகவிலைப்படிக்கு முழுமையாக வரி தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரிச் சட்டம் திட்டவட்டமாக தெரிவிக்கிறது.

Categories

Tech |