பிக்பாக்ஸ் வீட்டுக்குள் சென்ற ஜிபி முத்துவின் மனைவி யாரிடமும் சண்டை போடாமல் ஜெயிச்சுட்டு வர வேண்டும் என கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்பொழுது ஆரம்பித்துள்ளது. இதில் சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகம் தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள். டிக் டாக் மூலம் பிரபலமாகிய ஜி.பி.முத்து இந்த சீசனில் போட்டியாளராக களம் இறங்கி இருக்கின்றார். முதல் நாள் பிக்பாஸ் வீட்டுக்குள் கமலால் அனுப்பப்பட்ட போட்டியாளர்களில் ஜி.பி முத்து வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கின்றார்.
இவருக்கு இணையத்தில் லெட்டர் படிக்கும் வீடியோக்கள் பார்ப்பதற்கு என்று தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. இந்த நிலையில் தற்போது பிக்பாக்ஸில் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஜிபி முத்துவின் மனைவி அஜிதா அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, டிக் டாக்கில் வீடியோ போட ஆரம்பித்து அதன் பிறகு ரொம்ப கஷ்டப்பட்டு இன்று இந்த இடத்திற்கு வந்திருக்கின்றார். அதற்குக் காரணம் அவரின் முயற்சி தான். நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பாக அவரிடம் யாரிடமும் சண்டை போடாமல் நல்லா விளையாடி ஜெயிச்சுட்டு வரணும்னு சொல்லி இருக்கின்றேன். இதுவரை அவர் எங்களை விட்டு இருந்ததில்லை. அதை நினைத்தால் தான் மிகவும் வருத்தமாக இருக்கின்றது. இருந்தாலும் என் கணவர் ஜெயிக்க வேண்டும் என கூறியுள்ளார்.