தனுஷின் கேப்டன் மில்லர் படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவ நடிப்பில் சமீபத்தில் ‘நானே வருவேன்’ திரைப்படம் வெளியானது. அடுத்ததாக இவர் நடிப்பில் ‘வாத்தி’ திரைப்படம் ரிலீசாக உள்ளது. தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தில் பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கிறார். மேலும் ,இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சந்திப் கிஷான் ,நிவேதா சதீஷ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.