Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் இவரின் மிகப்பெரிய ரசிகன்”…. கமல் ஓபன் டாக்….!!!!!

கமல் தனக்கு பிடித்த இசையமைப்பாளர் குறித்து கூறியுள்ளார். 

பிரபல இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் ஓ பெண்ணே என்ற தனி இசை பாடலை அவரே பாடியும் நடித்தும் உருவாக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ளது. இதனை நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, எம்.எஸ்.விஸ்வநாதனை சந்திக்கும்போது பதற்றம் இருக்காது. சந்தோஷமாக இருக்கும். இளையராஜாவை சந்திக்கும் போது சத்தமாக பேசலாமா வேண்டாமா என்று கொஞ்சம் பயமாக இருக்கும். பேசாமல் இருந்தாலும் அவர் கொடுக்கும் இசையை சந்தோஷமாக வாங்கிக் கொண்டு வரலாம். நான் இளையராஜாவுக்கு பெரிய ரசிகன் என பெருமையாக கூறியுள்ளார்.

Categories

Tech |