பொதுவாக மருத்துவமனைக்கு சிகிச்சைகளுக்காக மாலை நேரங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் என ஆய்வு ஒன்று கூறுகிறது.
இதற்கான சில காரணங்களை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றன:
பொதுவாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் மதிய உணவு சாப்பிட்டு இருப்பார்கள். இதனால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் உதாரணமாக தூக்கம் வரும், சோம்பலாக இருக்கும். எனவே சிகிச்சை எடுத்துக்கொள்வது இடையூறாக இருக்கும்.
மேலும் நோயாளிகளை பார்க்க நீங்கள் செல்வது அவர்களுக்கு இடையூறாக இருக்க வாய்ப்புள்ளது என டியூக் (DUKE ) பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மாலை நேரங்களில் மருத்துமனை பணியாளர்களின் பணி மாற்றங்கள் (Shift changes ) நடைபெறும். இதனால் அனைத்து பணிகளிலும் சற்று தாமதம் ஏற்படும்.
இதுதவிர பணியை விட்டு செல்வார்கள் அவசர அவசரமாக தனது பணிகளை முடித்து செல்லுவதற்கு எண்ணுவார்கள்.
மாலைநேரங்களில் மருத்துவமனைகளில் சுத்தம் சற்று குறைவாக காணப்படும். காலை நேரத்தை விட 30% சுத்தம் குறைவாகவே இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே காலை நேரங்களில் சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது சிறந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.