Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வருகிற 25, 26-ஆம் தேதிகளில்….. நாகர்கோவில்-பெங்களூரு சிறப்பு ரயில்கள் இயக்கம்….. வெளியான தகவல்….!!!!

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது, நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து வருகிற 25-ஆம் தேதி இரவு 7.35 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்- பெங்களூர் கன்டோன்மென்ட் சிறப்பு ரயில்(06051) நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கரூர், நாமக்கல் வழியாக காலை 4.45 மணிக்கு சேலம் சென்றடையும். இதனை அடுத்து மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு கண்ட்ரோல்மென்ட் ரயில் நிலையத்திற்கு காலை 9.20 மணிக்கு வந்தடையும். இதேபோல் பெங்களூரு கன்டோன்மென்ட்- நாகர்கோவில் சிறப்பு ரயில்(06052) வருகிற 26-ஆம் தேதி காலை 10 15 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மதியம் 1:30 மணிக்கு சேலத்தை சென்றடையும். இதனை அடுத்து மதியம் 1.50 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12.20 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும்.

Categories

Tech |