இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள தாண்டவனுர் கிராமத்தில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சந்தோஷ்குமார் லிங்கம்மாள்(22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 வயதுடைய கனிஷ்கா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் சந்தோஷ் குமார் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த லிங்கம்மாள் நேற்று முன்தினம் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லிங்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் லிங்கம்மாளின் தாய் மணி தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.