Categories
மாநில செய்திகள்

“பில்டிங் ஸ்ட்ராங் BUT பேஸ்மட்டம் கொஞ்சம் வீக்”…… திமுகவை கிண்டலடித்த செல்லூர் ராஜு….!!!!

திமுக தலைவராக 2 வது முறையாக முதல்வர் ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு பொதுக்குழுவில் பேசிய அவர், கட்சியின் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் சிலர் ஒன்று பின் ஒன்றாக பிரச்சனைகளை உருவாக்கி தனக்கு தூக்கம் இல்லாத இரவுகளை தருவதாக வேதனையுடன் பேசியிருந்தார். ஸ்டாலின் இந்த பேச்சுக்கு வரவேற்பும் விமர்சனங்களும் கலவையாக வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் மு.க.ஸ்டாலினை பார்க்கும்போது பாவமாக உள்ளது என முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுகவின் 50 வது நிறைவு விழாவை கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லுலர் ராஜு தலைமையில் நடைபெற்றது.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசி அவர், முதல்வர் ஸ்டாலினை பார்க்கும்போது பாவமாக உள்ளது. எந்த முதலமைச்சருக்கும் இவ்வளவு மனம் வெதும்பி பேசியதாக வரலாறு இல்லை. ஜெயலலிதா ஆட்சியில் அதிகாரி முதல் அரசியல்வாதி வரை யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார். அதனை போல முதல்வர் ஸ்டாலின் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஸ்டாலின் இப்படி பேசியது திடமான தலைமைக்கு அழகு அல்ல என தெரிவித்த செல்லுர் ராஜு தான் லஞ்சம் வாங்கியதாக ஜெயலலிதாவிடம் புகார் சென்றபோது உடனடியாக விசாரித்து தன்னுடைய மாவட்ட செயலாளர் பதவி அவர் பறித்ததையும் நினைவு கூர்ந்தார். அதனைத் தொடர்ந்து இந்தி பிணைப்பு விவாகரத்தில் முதலமைச்சரின் செயல்பாட்டை வரவேற்கிறோம். தமிழகத்தில் எப்போதும் இரு மொழி கொள்கைதான் இருக்க வேண்டும். இந்தி திணைப்பு அதிமுக எதிர்க்கிறது. மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்க கூடாது. இதனையடுத்து அதிமுக ஆட்சி கவர்ந்து விடும் என ஸ்டாலின் ஆருடம் சொன்னார். ஆனால் அது நடக்கவில்லை. அதிமுகவை வழி நடத்தும் வலிமையான தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. திமுகவுக்கு தான் பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக் என்று கிண்டல் அடித்து பேசியுள்ளார்.

Categories

Tech |