Categories
தேசிய செய்திகள்

நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்கள்…. கேரள தம்பதியினரின் கொடூர செயல்…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!

தர்மபுரியை சேர்ந்த பத்மா என்பவர் கேரள மாநிலம் கொச்சியில் லாட்டரி விற்பனை செய்து வந்துள்ளார். அதேபோன்று காலடியை சேர்ந்த ரொஸாலி என்பவரும் லாட்டரி விற்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் வேலைவாங்கித் தருவதாக இடைத் தரகர் ஒருவர் அவர்கள் இருவரையும் அழைத்துச்சென்றுள்ளார். இதையடுத்து பத்தினம்திட்டாவில் மசாஜ் சென்டர் நடத்திவரும் லைலா – பகவந்த் சிங் தம்பதியினர், அவர்கள் இருவரையும் நரபலி கொடுத்து இருக்கின்றனர்.

இச்சம்பவத்தை அறிந்த கேரள காவல்துறையினர், அந்த தம்பதி மற்றும் இடைத்தரகர் ஆகிய 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மாவின் உறவினர்கள், அவரது தொலைபேசிக்கு அழைத்து இருக்கின்றனர். அப்போது பத்மாவின் தொலைபேசிக்கு தொடர்பு கிடைக்காததால் கொச்சி காவல்துறையில் செப்டம்பர் 27ல் புகாரளித்துள்ளனர். அதன்படி பத்மாவின் தொலைபேசி சிக்னலை ஆராய்ந்த காவலர்கள், கடைசியாக பத்தினம்திட்டா மாவட்டம் திருவலா பகுதியோடு சிக்னல் நின்றதை அடுத்து தீவிர விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் திருவலா பகுதி தம்பதியால் பத்மாவும், ரொஸாலி என்ற பெண்ணும் நரபலி கொடுக்கப்பட்டு அவர்கள் வீட்டிலேயே புதைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அம்பலமாகியது. இது தொடர்பாக கொச்சி காவல் ஆணையர் கூறியதாவது, கொலை செய்யப்பட்ட இருபெண்களின் உடல்களும் தோண்டி எடுக்கப்பட்டு தடவியல்துறை சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

Categories

Tech |