கல்லூரி பெண் ஊழியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 23 வயது இளம்பெண் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறார். நேற்று இரவு கல்லூரியில் இருந்து வெளியே வந்தபோது இளம்பெண்ணை குடிபோதையில் இருந்த வாலிபர் கையை பிடித்து இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த பெண் சத்தம் போட்டதால் வாலிபர் ஆபாசமாக பேசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து உமர் பாரூக் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.